மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி + "||" + Kills

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்
நொய்யல்
நொய்யல் அருகே வேலம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள ஒரு கிணற்றுக்கு ஆடுகளுக்கு தண்ணீர் எடுத்து வருவதற்காக கிணற்றுக்குள் இறங்கி உள்ளார்.அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் துரைசாமியை கிணற்றுக்குள் காணவில்லை. இறந்த நிலையில் துரை சாமி உடல் கிணற்றின் அடிப்பகுதிக்கு சென்று விட்டது. அதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றுக்குள் இறங்கி துரைசாமியின் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் கடற்படை அணிவகுப்பில் துப்பாக்கி சூடு; 2 வீரர்கள் சாவு
பாகிஸ்தானில் கடற்படை அணிவகுப்பில் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கடற்படை வீரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
2. புதிதாக 2,613 பேருக்கு பாதிப்பு அமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலி
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
3. கடந்த 3 நாட்களில் ஓமனில் 1,059 பேருக்கு கொரோனா பாதிப்பு 8 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
4. மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி
நொய்யல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
5. நைஜீரியாவில் பயங்கரம் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 16 பேர் சாவு
நைஜீரியா கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.