கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு கப்பட்டது
நொய்யல்
கரூர் மாவட்டம் மூர்த்திபாளையத்தை சேர்ந்தவர் தங்கராசு. விவசாயியான, இவரது தோட்டத்தில் கிணறு ஒன்று உள்ளது. இவருக்கு சொந்தமான மாடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பசுமாடு ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது. இதையடுத்து தங்கராசு அக்கம்பக்கத்தினரை அழைத்து பசுமாட்டை மீட்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story