ரேஷன்கார்டு, ஆதார் அட்டையை ஒப்படைத்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்


ரேஷன்கார்டு, ஆதார் அட்டையை ஒப்படைத்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 23 Feb 2021 12:45 AM IST (Updated: 23 Feb 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்

கரூர்
மின்சாரவாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்க வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் நாங்கள் வாழவே தகுதியில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் எங்கள் குடியுரிமையை ஒப்படைக்கிறோம் என்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மின்சாரவாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ரேசன் கார்டு, ஆதார் அட்டை  மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைத்தனர். மேலும் மனுவையும் அளித்துள்ளனர். 
அந்த மனுவில், நாங்கள் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக மின்சாரவாரியத்தில் சுமார் 8,400 பேர் உற்பத்தி மற்றும் பகிர்மான பிரிவுகளில் ஒப்பந்த பணியாளர்களாக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். கடந்த 22-2-2018 அன்று மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.380 என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அது முறையாக எங்களுக்கு வழங்கப்படவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்க வலியுறுத்தி இன்று (அதாவது நேற்று) கலெக்டர் அலுவலகத்தில் நாங்கள் வாழவே தகுதியில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் எங்கள் குடியுரிமையை ஒப்படைக்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Next Story