பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்


பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 12:47 AM IST (Updated: 23 Feb 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கரூர்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை ரத்து செய்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள் 37, 116 ஆகியவற்றை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ்குமார் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் ரகு, பொருளாளர் விஸ்வநாதன், வட்டார பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Next Story