மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க.சார்பில் இறகுப்பந்து போட்டி + "||" + Badminton tournament

அ.தி.மு.க.சார்பில் இறகுப்பந்து போட்டி

அ.தி.மு.க.சார்பில் இறகுப்பந்து போட்டி
அ.தி.மு.க.சார்பில் இறகுப்பந்து போட்டி
திருச்சி
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மன்னார்புரம் பேட்மிண்ட்டன் அசோசியேசன் மைதானத்தில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. போட்டியை மாநகர் மாவட்ட செயலாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இறகுப்பந்தை அடித்து தொடங்கி வைத்தார். இந்த போட்டி வருகிற 28-ந் தேதிவரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறும். ஆண்கள், பெண்கள் பங்கு பெறும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளாக சப்-ஜூனியர்ஸ் (11 வயது முதல் 15 வயதுவரை), ஜூனியர்ஸ் (17 வயது முதல் 19 வயதுவரை), சீனியர் மற்றும் 35 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட வெட்ரன்ஸ் பிரிவு, 75 வயது முதல் 85 வயதுக்குட்பட்ட ஜம்பில்டு பிரிவு என போட்டிகள் நடத்தப்படுகிறது.  தொடக்க நிகழ்ச்சியில் இறகுப்பந்து கமிட்டி செயலாளர் ஜவகர்லால்நேரு, டிஸ்ட்னி பேட்மிண்ட்டன் அசோசியேசன் நிர்வாக இயக்குனர் செந்தில், ஆலோசகர் மகேந்திரன், சீனியர் நடுவர்கள் பிரவீன் தாஸ், அர்விந்தன் மற்றும் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.