தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை,
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 279 ஆண்கள், 170 பெண்கள் என மொத்தம் 449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 151 பேரும், கோவையில் 40 பேரும், செங்கல்பட்டில் 34 பேரும், திருவள்ளூரில் 25 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூர், திருப்பத்தூரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 68 லட்சத்து 55 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் 34-வது நாளாக நேற்று 687 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 ஆயிரத்து 754 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்து 366 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 706 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 7 ஆயிரத்து 660 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர்.
Related Tags :
Next Story