உடன்குடி தண்டுபத்தில் தி.மு.க. தேர்தல் பிரசார குறுந்தகடு வெளியீடு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு


உடன்குடி தண்டுபத்தில் தி.மு.க. தேர்தல் பிரசார குறுந்தகடு வெளியீடு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 6:26 PM IST (Updated: 23 Feb 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. சார்பில் ஸ்டாலின் தான் வராரு என்ற தேர்தல் பிரசாரப் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைமை அலுவலகமான தண்டுபத்தில் வைத்து நடந்தது.

உடன்குடி:வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. சார்பில் ஸ்டாலின் தான் வராரு என்ற தேர்தல் பிரசாரப் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைமை அலுவலகமான தண்டுபத்தில் வைத்து நடந்தது.இதையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து குறுந்தகடை வெளியிட்டு பேசும்போது, கட்சியின் பிரசார பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலின் வரிகளை மக்கள் தினமும் வாயில் உச்சரிப்பதே ஆட்சி மாற்றத்திற்கான அடையாளம்.வரும் சட்டமன்ற தேர்தலில்திமுக கூட்டணி 200-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும்.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த எழுச்சிமிகு பாடல் ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என பேசினார். இதில் மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், ஓன்றிய செயலர் இளையராஜா, ஏரல் நகர செயலர் பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story