மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைக்குள் புகுந்த நாகப்பாம்பு + "||" + Cobra inside the ration shop

ரேஷன் கடைக்குள் புகுந்த நாகப்பாம்பு

ரேஷன் கடைக்குள் புகுந்த நாகப்பாம்பு
பழனியில் ரேஷன் கடைக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.
பழனி:
பழனி ெரயில்வே பீடர் சாலையில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. நேற்று இந்த கடையில் பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

 அப்போது ரேஷன் கடைக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் கடை விற்பனையாளர் அலறி அடித்து ஓடினர்.

 இதுகுறித்து பழனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். 

பின்னர் அவர்கள் ரேஷன் கடைக்குள் புகுந்த சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.