மாவட்ட செய்திகள்

விற்பனையாகாமல் தேங்கி கிடக்கும் பரங்கிகாய்கள் + "||" + Pumpkins

விற்பனையாகாமல் தேங்கி கிடக்கும் பரங்கிகாய்கள்

விற்பனையாகாமல் தேங்கி கிடக்கும் பரங்கிகாய்கள்
பரங்கி காய்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது.
வடகாடு, பிப்.24-
வடகாடு பகுதியில் பரங்கிகாய் விவசாயமும் நடைபெற்றுவருகிறது. தற்போது, இந்த பகுதியில் பரங்கிகாய் விளைச்சல் அதிக அளவில் உள்ளன. இதனால் இப்பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளில் பரங்கி காய்கள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. ஆனால், இதனை வாங்க யாரும் முன்வராததால் தேங்கி கிடக்கிறது.  இது குறித்து கமிஷன் கடை உரிமையாளர்கள் கூறும்போது பொங்கல் பண்டிகை நாட்களில் மட்டுமே அதுவும், குறைந்த அளவிலேயே பரங்கி காய்கள் விற்பனை ஆனது.  விவசாயிகள் கொண்டு வரும் பரங்கிகாய்களை வேண்டாம் என்று கூறாமல் ரூ.10-க்கு வாங்கி வைத்துள்ளோம். வெளியூர் வியாபாரிகள் கூட வாங்க மறுத்து வருகிறார்கள். இதனால் பரங்கி காய்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது.