கரூரில் ரூ.41 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆசாத் பூங்கா


கரூரில் ரூ.41 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆசாத் பூங்கா
x
தினத்தந்தி 24 Feb 2021 12:56 AM IST (Updated: 24 Feb 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் ரூ.41 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆசாத் பூங்கா

கரூர்
கரூர் மைய பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆசாத் பூங்கா ரூ.41 லட்சத்தில் மறுசீரமைக்கப்பட்டு, திறப்பு விழா நடந்தது. இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பூங்காவை திறந்து வைத்து, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், பூங்கா 1940-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கரூர் நகராட்சி பொதுநிதியில் ரூ.25 லட்சமும், கரூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.16 லட்சமும் என ரூ.41 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. 
இந்த பூங்காவில் மேற்கூரையுடன் கூடிய நடைபயிற்சி பாதையும், சிறுவர்கள் விளையாடக்கூடிய விளையாட்டு அம்சங்களும், செயற்கையான நீர் ஊற்றும், கலைநயம் கொண்ட அமரும் இடங்களும், சுற்றுச்சுவர் முழுவதும் வண்ண ஓவியங்களும் வரையப்பட்டு உள்ளன. இந்த பூங்காவின் மையப்பகுதியில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் உருவச்சிலையை சுற்றிலும் வண்ண மீன்கள் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. நவீன கழிப்பறை வசதி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் அதிக அளவில் மரங்கள் உள்ளது. இதில் பல ஆண்டு காலமாக பல்வேறு வகையான பறவைகள் இரவில் வந்து தங்கிச்செல்வது சிறப்பு அம்சமாகும். என்றார்.


Next Story