கரும்புக்கான கூடுதல் விலையை அறிவிக்க கோரிக்கை

மங்களமேடு
பெரம்பலூர் சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம், சங்கத் தலைவர் ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராசேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சீனிவாசன், கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், காங்கிரஸ் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஆ.பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தலைமை நிர்வாகி பணியிடம் காலியாக இருப்பதால் அந்த இடத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். 2020-21-ம் ஆண்டுக்கு வெட்டிய கரும்புக்கு சென்ற ஜனவரி மாதம் 22-ந் தேதி வரை மட்டுமே பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒருமாதமாக பாக்கியுள்ள தொகையை உடனே கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். 2020-21-ம் ஆண்டுக்கு கரும்புக்கான கூடுதல் விலையை உடனே அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story