மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு + "||" + 7 pound chain flush with the woman who walked by

நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சி, 
திருச்சி உறையூர் தியாகராஜ நகரை சேர்ந்தவர் ஞானசம்பந்தன். இவரது மனைவி உஷாராணி (வயது 55). நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் இவர் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த 2 வாலிபர்கள் உஷாராணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதுபற்றி உஷாராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த வழிப்பறி சம்பவம் நடப்பதற்கு முன் அதே பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஜாஸ்மின் என்பவரிடமும் இதே நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசிக்கப்பட்டவை