ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்


ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2021 2:38 AM IST (Updated: 24 Feb 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்

மதுரை
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலைகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து சோசியல் டெமக்ராடிக் டிரேட் யூனியன் சார்பில் மதுரை அண்ணா பஸ்நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் யூசுப் வரவேற்றார். எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை மாவட்ட பேச்சாளர் பிலால்தீன், தொழிற்சங்க மாநில செயலாளர் அப்துல் சிக்கந்தர் ஆகியோர் பேசினர். மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் தொழிற்சங்க துணை செயலாளர் சாகுல் ஹமீது நன்றியுரை நிகழ்த்தினார். 
ஆர்ப்பாட்டத்தில் கலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொண்டு அனைத்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இன்னல்களைப் போக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர்.

Next Story