கரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா


கரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 25 Feb 2021 12:37 AM IST (Updated: 25 Feb 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் நேற்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கரூர்
பிறந்தநாள் விழா 
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழாவை நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக கரூர் லைட்ஹவுஸ் கார்னில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலைக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கு மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன் தலைமை தாங்கினார். இதில், மத்திய நகரசெயலாளர் நெடுஞ்செழியன், வடக்கு நகர செயலாளர் பாண்டியன், இளைஞர் அணி நகர செயலாளர் சேரன் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், ஜெயலலிதாவின் வெண்கல சிலைக்கு அருகே உள்ள எ.ம்.ஜி.ஆர், அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில் கோவை ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் வக்கீல் சரவணன் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 
கட்டணமில்லா மினி பஸ்கள் இயக்கம்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் கரூர் காந்திகிராமத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதேபோல் கரூர் நகரின் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் நேற்று ஒரு நாள் மட்டும் கரூரில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மினி பஸ்கள் கட்டணமில்லாமல் இயங்கின. இதில் ஏராளமான பொதுமக்கள் பயணித்தனர்.
அ.ம.மு.க. 
கரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், பொருளாளர் காதப்பாறை தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நொய்யல்
கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், கரூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான என்ஜினீயர் கமலக்கண்ணன் தலைமையில் கரைப்பாளையம், முத்தனூர், செல்வநகர், சேமங்கி, வடிவேல் நகர், நொய்யல் குறுக்குசாலை, புன்னம்சத்திரம், தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காகிதபுரம் பேரூர் கழகம் சார்பில் காகித ஆலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு காகிதபுரம் பேரூர் கழக செயலாளர் வக்கீல் சதாசிவம் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
இதேபோல் புன்செய்புகளூர் பேரூர் கழகம் சார்பில் வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு பேரூர் கழக செயலாளர் கே.சி.எஸ்.விவேகானந்தன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் கரூர் மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் சரவணன், வேட்டமங்கலம் கூட்டுறவு வங்கித்தலைவர் முனுசாமி, நொய்யல் சுரேஷ்குமார், வேட்டமங்கலம் ஊராட்சி துணைத் தலைவர் சோமசுந்தரம், முன்னாள் ஊராட்சித்துணைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் வேட்டமங்கலம் கூட்டுறவு வங்கி இயக்குனர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
வெள்ளியணை
வெள்ளியணை கடைவீதியில் அ.தி.மு.க. சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் ஜெகதாபி, உப்பிடமங்கலம், மணவாடி, ஏமூர், கே.பி.தாழைப்பட்டி, கந்தசாரப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தோகைமலை 
தோகைமலையில், மேற்கு ஒன்றிய அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சேப்ளாப்பட்டி மணிமாறன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் பூபதி, தோகைமலை ஒன்றிய செயலாளர் மணிவேல் ஆகியோர் முன்னிைல வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story