டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 12:21 AM IST (Updated: 26 Feb 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர்
அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும். பாதுகாப்பான பணி நிலைமை ஏற்படுத்த வேண்டும். சுழற்சி முறையில் மாறுதல் வழங்கிட வேண்டும். விற்பனை நேரம் குறைத்திட வேண்டும். பாதுகாப்பற்ற கடைகளை மூட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு டாஸ்மாக் சங்க எல்.பி.எப். மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் எல்.பி.எப். மாவட்ட செயலாளர் பழ.அப்பாசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story