பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 10:40 PM IST (Updated: 26 Feb 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

அகவிலைப்படியை உடனே வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்:
நாகை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார், தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 
அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவருக்கு மருத்துவ பணியை வழங்க வேண்டும். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு 8 சதவீத கருணை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story