ஆரணி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


ஆரணி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Feb 2021 1:04 PM GMT (Updated: 28 Feb 2021 1:04 PM GMT)

ஆரணி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

ஆரணி

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் பரதேசி கோவிந்தராஜ் சாமியார் மடம் செயல்பட்டு வருகிறது. அந்த மடத்தை ஊர் மக்கள் மேற்பார்வையில் நிர்வாகிகள் நீண்ட காலமாக நிர்வகித்து வருகின்றனர். அந்த மடத்துக்கு சொந்தமாக 40 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலம் ஏற்கனவே இருந்த பழைய ெபயரிலேயே ஆவணங்கள் உள்ளது. வருவாய்த்துறை பழைய ரெக்கார்டுகளிலும் மடத்தின் பெயர் உள்ளது.

சமீபத்தில் கணினியில் பட்டா ஆவணங்கள் பெயர் பதிவேற்றம் செய்தபோது, தவறுதலாக வேறொருவரின் பெயரில் பட்டா தட்டச்சு செய்யப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தத் தவறை பயன்படுத்தி ஒரு சிலர் மடத்தின் நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, விற்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

இதையறிந்த முள்ளிப்பட்டு கிராம மக்கள் திரண்டு வந்து ஆரணி தாலுகா அலுவலகத்தை சூழ்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தாசில்தார் ரே.செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடியிடமும் கோரிக்கை மனு வழங்கினர்.

Next Story