பெரிய அய்யனார் கோவில் தேரோட்டம்
வாராப்பூர் பெரிய அய்யனார் கோவில் தோரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆலங்குடி:
அய்யனார் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள வாராப்பூரில் பெரிய அய்யனார், கருப்பர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை அய்யனார் மற்றும் கருப்பருக்கு காப்பு கட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து தினமும் மண்டகப்பட்டிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் பில்லி சோறு எறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் பெரிய அய்யனார், கருப்பர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளினர். இதையடுத்து காலை 9 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது.
ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடியிருந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story