வேலூரில் ஒன்றாக பயிற்சி பெற்ற போலீசார் 19 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு


வேலூரில் ஒன்றாக பயிற்சி பெற்ற போலீசார் 19 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 7:02 PM GMT (Updated: 28 Feb 2021 7:02 PM GMT)

ஒன்றாக பயிற்சி பெற்ற போலீசார் 19 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு

வேலூர்

வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 2002-ம் ஆண்டு 292 பேர் 2-ம் நிலை காவலர்களாக பயிற்சி பெற்றனர். அவர்கள் தற்போது ஏட்டு, சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பொறுப்புகளில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். 2002-ம் ஆண்டு பயிற்சி பெற்ற போலீசார் 19 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு மற்றும் பணியில் சேர்ந்து 20-ம் ஆண்டு தொடக்கம் ஆகிய நிகழ்ச்சி வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காவலர் பயிற்சி பள்ளி இன்ஸ்பெக்டர் கனிமொழி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டுரங்கன், சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு வரவேற்றார்.

 சிறப்பு அழைப்பாளராக 2002-ம் ஆண்டு காவலர் பயிற்சி பள்ளியில் 292 பேருக்கும் பயிற்சி அளித்த தற்போது ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பயிற்சியின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். முன்னதாக பயிற்சி பள்ளி வளாகத்தில் 35 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் ஓய்வுப்பெற்ற இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் பயிற்சி பள்ளியில் பணிபுரியும் போலீசாருக்கு நினைவுபரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டனர். இதில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.


Next Story