சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை
மதுரை
நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு அவர்கள் அடுத்த மாதம் 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை
விளையாட்டுத்துறையில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவி தொகையாக மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான குறைந்தபட்ச தகுதிகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பு, அந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதற்கு மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தேசிய அளவிலான போட்டிகள், சர்வதேச போட்டிகளில் குறைந்தபட்சம் 6 நாடுகளில் பங்கேற்றிருப்பது போன்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக இளம் வயதில் பங்கேற்று வெற்றி பெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்பட உள்ளது.
19-ந்தேதிக்குள்...
2011-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் வருமானம் 6 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். முதியோருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை. தகுதி போட்டியின்றி நேரடியாக தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட போட்டிகள் தகுதியில்லை.
இணையதளம் மூலம் அந்த விண்ணப்பங்கள் வருகிற மார்ச் 19-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விளையாட்டு வீரர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story