லாரி மோதி வாலிபர் பலி
லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்
வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி தெற்குதெருவை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் சந்தனகுமார் (வயது23). இவர் சின்னாள பட்டியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார். நேற்று மதியம் 2 மணிக்கு அதேதெருவை சேர்ந்த அழகர் மகன் பழனிச்சாமி (20), மருத முத்து மகன் சிவமூர்த்தி (18) ஆகிய 3 பேரும் மதுரைக்கு செல்போன் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். அந்த மோட்டார் சைக்கிளை பழனிச்சாமி ஓட்டினார். பின்புறம் சந்தனகுமாரும், சிவமூர்த்தியும் அமர்ந்து இருந்தனர். இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியில் சிவமூர்த்தி பரிதாபமாக உயிரிழந் தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் கேசவராமசந்திரன் ஆகியோர் வழக்குப ்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story