வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருப்பணிக்காக பாலாலய பூஜை


வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருப்பணிக்காக பாலாலய பூஜை
x
தினத்தந்தி 3 March 2021 11:39 PM IST (Updated: 3 March 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருப்பணிக்காக பாலாலய பூஜை நடைபெற்றது

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலைத்துறை, விழாக்குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள நேற்று காலை பாலாலய பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் யாகசாலை பூஜையும் நடந்தது. முடிவில் பாலாலய பிரதிஷ்டை அபிஷேகமும் நடைபெற்றது. இதில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், வியாபார பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Tags :
Next Story