நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை ரூ.5 உயர்வு


நாமக்கல் மண்டலத்தில்  கறிக்கோழி விலை ரூ.5 உயர்வு
x
தினத்தந்தி 5 March 2021 5:57 PM GMT (Updated: 5 March 2021 5:57 PM GMT)

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை ரூ.5 உயர்வு

நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி விலை கிலோ ரூ.101-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.44-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததோடு, முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
=======

Next Story