வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்


வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 5 March 2021 8:14 PM GMT (Updated: 5 March 2021 8:14 PM GMT)

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது.

நெல்லை, மார்ச்:
வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு வருகிற மே மாதம் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.  மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.

கலெக்டர் ஆய்வு

மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை உதவி கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீப் தயாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் கந்தப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட ஊடக கண்காணிப்பு மையத்தை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பார்வையிட்டார்.

Next Story