சத்தி புலிகள் காப்பகத்தில் மீண்டும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்


சத்தி புலிகள் காப்பகத்தில் மீண்டும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
x
தினத்தந்தி 5 March 2021 9:41 PM GMT (Updated: 5 March 2021 9:41 PM GMT)

சத்தி புலிகள் காப்பகத்தில் மீண்டும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடம்பூர், கேர்மாளம், ஆசனூர், தலமலை, தாளவாடி, ஜீர்கள்ளி என 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் 6 நாட்கள் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில் 3 நாட்கள் பகுதிவாரி கணக்கெடுப்பும், 3 நாட்கள் நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பும் தொடர்ந்து நடைபெறும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி பவானிசாகர், விளாமுண்டி வனப்பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றபோது கல்லாம்பாளையம் என்ற இடத்தில் யானை தாக்கியதில் வனக்காவலர் மற்றும் சமூக ஆர்வலர் என 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து வனவிலங்குகள் கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டது. தற்போது சமூக ஆர்வலர்கள் இல்லாமல் 5 பேர் கொண்ட வனஊழியர்களை கொண்டு நேற்று 10 வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு மீண்டும் தொடங்கியது.

Next Story