அய்யனார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.9½ லட்சம்


அய்யனார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.9½ லட்சம்
x
தினத்தந்தி 9 March 2021 7:00 PM GMT (Updated: 9 March 2021 7:00 PM GMT)

அய்யனார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.9½ லட்சம்

கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் பிரமாண்ட குதிரை சிலையுடன் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமகத் திருவிழா கடந்த வாரம் 3 நாட்கள் நடந்தது. திருவிழாவில் பிரமாண்ட குதிரை சிலைக்கு 2 ஆயிரத்தி 33 காகிதப்பூ மாலைகளை பக்தர்கள் அணிவித்திருந்தனர். மேலும் ஏராளமானோர் பால்குடம், காவடி எடுத்தனர். இந்த நிலையில் நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அதில் ரூ.9 லட்சத்து 46 ஆயிரத்து 325-மும், 2 கிராம் தங்கமும் இருந்தது.

Next Story