சத்தியமங்கலம் மார்க்கெட்டில் முல்லைப்பூ கிலோ ரூ.960-க்கு விற்பனை


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் முல்லைப்பூ கிலோ ரூ.960-க்கு விற்பனை
x
தினத்தந்தி 11 March 2021 9:47 PM GMT (Updated: 11 March 2021 9:47 PM GMT)

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் முல்லைப்பூ கிலோ ரூ.960-க்கு விற்பனை ஆனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.647-க்கும், முல்லை ரூ.960-க்கும், காக்கடா ரூ.450-க்கும், செண்டுமல்லி ரூ.45-க்கும், பட்டுப்பூ ரூ.96-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.150-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது. 

Next Story