ஈரோடு வழியாக செல்லும் கோவை-நாகர்கோவில் ரெயில்கள் ரத்து


ஈரோடு வழியாக செல்லும் கோவை-நாகர்கோவில் ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 19 March 2021 11:28 PM GMT (Updated: 19 March 2021 11:28 PM GMT)

ஈரோடு வழியாக செல்லும் கோவை-நாகர்கோவில் ரெயில்கள் பகுதி வழித்தடம் ரத்து செய்யப்படுகிறது.

ஈரோடு
ஈரோடு வழியாக செல்லும் கோவை-நாகர்கோவில் ரெயில்கள் பகுதி வழித்தடம் ரத்து செய்யப்படுகிறது.
ரத்து
சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மதுரை திருமங்கலம் மற்றும் நெல்லை துலுக்கப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே 2 வழித்தடத்தில் மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்கள் ரத்து மற்றும் பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நாகர்கோவிலில் இருந்து தினசரி காலை 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் -கோவை சிறப்பு ரெயில் (06321) 21-ந் தேதி (நாளை) முதல் 30-ந் தேதி வரை பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் குறிப்பிட்ட நாட்களில் மதுரை முதல் கோவை வரை மட்டுமே ஓடும். இதுபோல் தினசரி காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் 06322 என்ற எண் கொண்ட சிறப்பு ரெயில் நாகர்கோவில் வரை செல்லாது. கோவையில் இருந்து மதுரை வரை மட்டும் ஓடும்.
வண்டி எண் 02667 நாகர்கோவில்-கோவை சிறப்பு ரெயில் தினசரி இரவு 9.45-க்கு புறப்படுகிறது. இந்த ரெயில் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து கோவை வரை மட்டும் ஓடும். இதுபோல் வண்டி எண் 02668 கோவை-நாகர்கோவில் சிறப்பு ரெயில் கோவையில் இருந்து மதுரை வரை மட்டுமே ஓடும்.
மைசூர் ரெயில்
வண்டி எண் 06235 தூத்துக்குடி- மைசூரு சிறப்பு ரெயில் வருகிற 30-ந் தேதி மதுரையில் இருந்து மைசூருவரை இயக்கப்படும். இதுபோல் வண்டி எண் 06236 மைசூரு முதல் மதுரைவரை மட்டும் ஓடும்.
வண்டி எண் 06340 நாகர்கோவில் -மும்பை சிறப்பு ரெயில் வருகிற 30-ந் தேதி காலை 6 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும். பின்னர் திருவனந்தபுரம் வழியாக சொரணூர், தோக்கூர் வழியாக வழித்தட மாற்றம் செய்து திருப்பி விடப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story