திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 20 March 2021 10:25 PM IST (Updated: 20 March 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்செந்தூர், மார்ச்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றின் அளவுகோல்களின் ஒரு பகுதியாக சமூக நீட்டிப்பு செயல்பாடானது அடைக்கலாபுரம் தூய சூசை அறநிலையத்தில் நடந்தது. அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் அரிசி, கோதுமை, சீனி, பிஸ்கட், பழங்கள், ரொட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அன்பரசன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். பேராசிரியர்கள் பாலு, சேகர், கார்த்திகேயன், எழிலி, முருகேசுவரி, அலுவலக கண்காணிப்பாளர் பொன்னுதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அகதர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சகாய சித்ரா செய்து இருந்தார்.
1 More update

Next Story