தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்


தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 20 March 2021 10:39 PM GMT (Updated: 2021-03-21T04:09:17+05:30)

தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை:
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நெல்லை மாநகர போலீசாருடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு மாநகர போலீஸ் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் முன்னாள் ராணுவத்தினரின் பங்களிப்பால் சிறப்பாகவும், அமைதியாகவும் தேர்தல் நடைபெற்றன. அதே போல் இந்த ஆண்டும் தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற தங்களது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

தேர்தல் பணி செய்கிறவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும். மேலும் அவர்கள் தேர்தலில் தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். எனவே விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் நெல்லை மாநகர போலீஸ் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 0462-2970087 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு தெரிவித்து உள்ளார்.

Next Story