ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு


ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 March 2021 5:04 PM GMT (Updated: 21 March 2021 5:04 PM GMT)

கொடைரோடு அருகே உள்ள ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஒரு கிராமத்தில் 4 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்:
கொடைரோடு அருகே உள்ள ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் பரிசோதனையில் 4 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். 

மேலும் கிராமத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து கிராமத்துக்கு மக்கள் வர தடைவிதிக்கப்பட்டது. 

அந்த கிராமமே சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் நிலக்கோட்டை ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி தலைவர் பவுன்தாய் மற்றும் துப்புரவு பணியாளர்கள் முகாம் அமைத்து கிராம மக்களுக்கு உணவு பொருட்கள், குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தநிலையில் நேற்று அந்த கிராமத்திற்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேரில் சென்று சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். 

அவருடன் நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா, போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருந்தனர். 

Next Story