திருப்பூர் மாநகரில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் போலீஸ் கொடி அணிவகுப்பு

திருப்பூர் மாநகரில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் போலீஸ் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 21 March 2021 5:54 PM GMT (Updated: 2021-03-21T23:24:03+05:30)

திருப்பூர் மாநகரில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் போலீஸ் கொடி அணிவகுப்பு

திருப்பூர், 
திருப்பூர் மாநகரில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் போலீஸ் கொடி அணிவகுப்பு நேற்று காலை நடைபெற்றது. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பகுதியில் இருந்து அணிவகுப்பு தொடங்கி பாப்பநாயக்கன்பாளையம், கோல்டன் நகர் பகுதியில் நிறைவடைந்தது. மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் 70 பேர் மற்றும் உள்ளூர் போலீசார் 60பேர் என மொத்தம் 130 பேர் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.
திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கணேசன் (திருப்பூர் வடக்கு), கந்தசாமி (திருமுருகன்பூண்டி) மற்றும் போலீசார் இதில் கலந்து கொண்டனர்.

Next Story