கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 23 March 2021 12:04 PM GMT (Updated: 23 March 2021 12:04 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பஸ் நிலையம், சின்னக்கடை தெரு, போளூர் ரோடு, மத்தளம் குளத்தெரு, மார்க்கெட் பகுதி, திருவூடல் தெரு, தேரடி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதா? என்று நகராட்சி அலுவலர்கள் திடீரென ஆய்வு செய்தனர். 

அப்போது முகக்கவசம் அணியாத நபர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காத நிறுவனங்கள், முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் மற்றும் பொது இடங்களில் சுற்றி வந்த பொதுமக்கள் போன்றவர்களை கண்டறிந்து ரூ.18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளிகளை பின்பற்றாமலும் சென்ற பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி தொடர்ந்து இவ்வாறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். 

Next Story