முதியோர்-மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டு பெறும் பணி தொடங்கியது


முதியோர்-மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டு பெறும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 27 March 2021 8:27 PM GMT (Updated: 27 March 2021 8:27 PM GMT)

பெரம்பலூர் தொகுதியில் முதியோர்-மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தபால் ஓட்டு பெறும் பணி தொடங்கியது

பெரம்பலூர்:

1,827 பேருக்கு தபால் ஓட்டுகள்
சட்டமன்ற தேர்தலில் இந்த முறை மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தபால் ஓட்டு போடலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய தொகுதிகளில் மொத்தம் 7,064 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 11,699 முதியோர் வாக்காளர்களும் உள்ளனர்.
இதில் பெரம்பலூர் (தனி) தொகுதியில் 615 முதியோர் வாக்காளர்களும், 380 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், குன்னம் தொகுதியில் 538 முதியோர் வாக்காளர்களும், 294 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் என மொத்தம் 1,827 பேர் தபால் ஓட்டு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தபால் ஓட்டு போட்டனர்
அவர்கள் வருகிற 1-ந்தேதி வரை வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடலாம். அதன்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று முதல் முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டு பெறும் பணி தொடங்கியது. குன்னம் தொகுதியில் நாளை(திங்கட்கிழமை) முதல் தபால் ஓட்டு பெறும் பணி தொடங்குகிறது.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இந்த பணியில் 15 மண்டல அலுவலர்கள் அங்கிய அலுவலர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு மண்டல அலுவலரும் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட வாகனத்துடன் தலா ஒரு வாக்குச்சாவடி அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர், நுண் பார்வையாளர், ஒளிப்பதிவாளர், போலீஸ்காரர் ஆகியோருடன் சென்று முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டு பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில் ஓட்டைப்பதிவு செய்து, தபால் ஓட்டு போட்டனர்.

Next Story