திட்டக்குடி அருகே பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது


திட்டக்குடி அருகே   பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 March 2021 2:10 AM IST (Updated: 29 March 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் கைது

திட்டக்குடி, 
திட்டக்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் ஆபாச படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதை பார்த்த அந்த பெண்ணும், அவரது கணவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் ஆவினங்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேல்நெமிலி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 22) என்பவர், அந்த பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, அதனை போலி பெயரில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டதும் தெரியவந்தது. இதேபோல் வெங்கடேசன், பல பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதும் தெரிந்தது. இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். 

Next Story