கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை முதல் மதுக்கடைகளை 4 நாட்கள் மூடவேண்டும் கலெக்டர் கிரண்குராலா உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை முதல் மதுக்கடைகளை 4 நாட்கள் மூடவேண்டும்  கலெக்டர் கிரண்குராலா உத்தரவு
x
தினத்தந்தி 2 April 2021 5:21 PM GMT (Updated: 2 April 2021 5:21 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை முதல் மதுக்கடைகளை 4 நாட்கள் மூடவேண்டும் கலெக்டர் கிரண்குராலா உத்தரவு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்த மாதம்(மே) 2-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வாக்குப் பதிவு நாளான வருகிற 6-ந் தேதி(செவ்வாய்கிழமை) வரை 3 நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான அடுத்த மாதம் 2-ந் தேதியும்(ஞாயிற்றுக்கிழமை) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் தனியார் மதுக்கடைகளை மூடவேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story