ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 46 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 46 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 April 2021 9:06 PM GMT (Updated: 2 April 2021 9:06 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வேகமாக பரவும் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். எனினும் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
46 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 10-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மேலும் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில்    மொத்த பாதிப்பு 15 ஆயிரத்து     425ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 25 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 62 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 150 பேர் இறந்துள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 213 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Next Story