மாவட்ட செய்திகள்

ஆசனூா் அருகேவனப்பகுதியில் காட்டுத்தீ + "||" + forest fire

ஆசனூா் அருகேவனப்பகுதியில் காட்டுத்தீ

ஆசனூா் அருகேவனப்பகுதியில் காட்டுத்தீ
ஆசனூா் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது.
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதி தற்போது கடும் வறட்சியில் உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்கதை ஆகிவருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீ பற்ற தொடங்கி உள்ளது.
ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட அரேபாளையம் பிரிவு வனப்பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் காட்டுத்தீ பற்றியது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இதை பார்த்த சிலர் ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 2 ஏக்கர் பரப்பளவு உள்ள மரம், செடி-கொடிகள் எரிந்து நாசம் ஆனது

தொடர்புடைய செய்திகள்

1. பண்ணாரி வனப்பகுதியில் காட்டுத்தீ: மரம், செடி-கொடிகள் எரிந்து நாசம்
பண்ணாரி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசம் ஆனது.
2. சத்தியமங்கலம் அருகே ராமர் போலிமலையில் காட்டுத்தீ பல நூறு ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசம்
சத்தியமங்கலம் அருகே ராமர் போலி மலையில் காட்டுத்தீ பற்றி எரிகிறது.
3. தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ
தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது.
4. கர்நாடகத்தில் 3 நாட்களாக தொடரும் காட்டுத்தீ; 5 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்
கதக் அருகே 3 நாட்களாக தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.
5. தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ; பல ஏக்கரில் செடி-கொடிகள் எரிந்து நாசம்
தாளவாடி அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல ஏக்கர் பரப்பளவிலான செடி-கொடிகள் எரிந்து நாசம் ஆனது.