மாவட்ட செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அ.தி.மு.க. நிச்சயம் நிறைவேற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு + "||" + minister MR Vijayabaskar, AIADMK has kept all its election promises

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அ.தி.மு.க. நிச்சயம் நிறைவேற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அ.தி.மு.க. நிச்சயம் நிறைவேற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அ.தி.மு.க. நிச்சயம் நிறைவேற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
கரூர்,
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அ.தி.மு.க. நிச்சயம் நிறைவேற்றும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

தீவிர வாக்கு சேகரிப்பு
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, கணபதிபாளையம், அசோக்நகர், ஜீவாநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:- 

தமிழக முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எளிமையான மனிதர். இவரது ஆட்சியில் பல்வேறு போராட்டங்களை சந்தித்து, தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் முதல்&அமைச்சர். கொ ரோனா காலத்தில் போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கிய மாநிலம் தமிழகம் தான்.

நிச்சயம் நிறைவேற்றப்படும்
கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.1000&மும், ரேஷன் கடையில் விலையில்லாமல் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. லைட்ஹவுஸ் முதல் வெங்கக்கல்பட்டி வரை சென்டர் மீடியன் மின்விளக்குகள் அமைத்து கொடுத்து உள்ளேன். அ.தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயமாக நிறைவேற்றும். 

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, இலவச கேபிள், சோலார் அடுப்பு வழங்கப்படும். குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும். தி.மு.க. வந்தால் ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து தலை தூக்கும். அதனால் நன்றாக சிந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கருத்துக்கணிப்புகளை தவிடு பொடியாக்குவோம்: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும்; அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
தமிழகத்தில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
2. அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை
அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை
3. உத்திரமேரூரில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
4. அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி மனு சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீஸ்
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
5. கொரோனா தொற்றுநோய் பரவும் விதமாக ஊர்வலமாக சென்ற அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் 95 பேர் மீது போலீசார் வழக்கு - தாசில்தாரை திட்டியதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் 10 பேரிடம் விசாரணை
கொரோனா தொற்றுநோய் பரவும் விதமாக ஊர்வலமாக சென்றதாக அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் 95 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை