நெல்லை மாவட்டத்தில் இதுவரை ரூ.14½ கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்


நெல்லை மாவட்டத்தில் இதுவரை  ரூ.14½ கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 April 2021 6:57 PM GMT (Updated: 4 April 2021 6:57 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் இதுவரை ரூ.14½ கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் இதுவரை ரூ.14½ கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

கண்காணிப்பு குழு

நெல்லை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், அனுமதி இல்லாமல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவும் நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகளை மீறப்படுகிறதா என்று கண்டறிய 15 நிலை குழுக்களும், 15 பறக்கும் படைகளும், 5 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 5 செலவின கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் 24 மணி நேரம் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பறக்கும் படைகள் மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த குழுக்களின் சோதனையில் இதுவரை மொத்தம் ரூ.14 கோடியே 39 லட்சத்து 16 ஆயிரத்து 744 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

நடவடிக்கை

இந்த நிலையில் அம்பை, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் அம்பை சட்டமன்ற தொகுதி நிலை கண்காணிப்பு குழுவுக்கு தகவல் தெரிந்து வாக்காளர் பணம் வினியோகம் செய்யப்பட்ட 3 நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து ரூ.32 ஆயிரம் பறிமுதல் செய்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் நாங்குநேரி சட்டசபை பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர், 3 பேரை பிடித்தும், அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்து மூைலக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களின் வீடு மற்றும் தொடர்புடைய நபர்களிடம் வருமான வரித்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

ஜூ-விசில் செயலி மூலம் பொதுமக்கள் புகார்களை தெரிவித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு தெரித்து உள்ளார்.

Next Story