வாக்குச்சாவடி அமைக்காததால் வீடுகளில் கருப்புக்கொடி கட்டிய கிராம மக்கள்


வாக்குச்சாவடி அமைக்காததால் வீடுகளில் கருப்புக்கொடி கட்டிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 5 April 2021 6:26 PM GMT (Updated: 5 April 2021 6:26 PM GMT)

வாக்குச்சாவடி அமைக்காததால் வீடுகளில் கருப்புக்கொடியை கிராம மக்கள் கட்டினர்

சாயல்குடி
சாயல்குடி அருகே உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் 430 வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்களது கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைத்து அனைவரும் வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக தங்களது கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்காமல் அருகில் உள்ள கிராமங்களில் தங்களது கிராமத்து வாக்காளர்களை பிரித்து வாக்களிக்கும் வழியில் அதிகாரிகள் வாக்குச்சாவடியை அமைத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் வகையில் கிராமம் முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியுள்ளனர். எனவே அல்லிக்குளம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story