வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டன


வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டன
x
தினத்தந்தி 5 April 2021 8:08 PM GMT (Updated: 5 April 2021 8:08 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டன.

அரியலூர்:

வாக்குப்பதிவு எந்திரங்கள்
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5 லட்சத்து 30 ஆயிரத்து 25 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக 355 மையங்களில் 753 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று(செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளதையொட்டி அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து 53 மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்கள், வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் மை, வாக்காளர் பட்டியல், வேட்பாளர்கள் விவரம், பூத் விவர அறிவிப்பு பதாகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
கண்காணிப்பு கேமரா
இந்த பொருட்கள் அனைத்தும் மண்டல அலுவலர்களுடன், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஆகியோருடன் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. மேலும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள 130 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் நுண்பார்வையாளர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு பணி ஆணையை பெற்றுச்சென்றனர். மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்தவுடன் அவர்களுக்கு முக கவசம் அளிக்கவும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது.

Next Story