தென்காசி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு


தென்காசி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு
x
தினத்தந்தி 6 April 2021 9:32 PM GMT (Updated: 6 April 2021 9:32 PM GMT)

தென்காசி மாவட்டத்தி்ல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இரவு 7 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. பின்னர் அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைத்து பூட்டப்பட்டது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அதாவது பூட்டி சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக 147 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தலா 10 முதல் 15 வாக்குச்சாவடிகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு அவர்கள் வரிசை முறையில் சென்று ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்தும் மின்னணு வாக்கு எந்திரங்களை பத்திரமாக லாரியில் ஏற்றினர். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சேகரித்து முடித்த பிறகு அவற்றை பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சி யு.எஸ்.பி. கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கலெக்டர் சமீரன் மற்றும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில், பாதுகாப்பு அறையில் வரிசையாக வைத்தனர். இந்த பணி இன்று (புதன்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது.

Next Story