செல்போன் கோபுரம் அமைக்காததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு


செல்போன் கோபுரம் அமைக்காததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 7 April 2021 12:49 AM GMT (Updated: 7 April 2021 12:49 AM GMT)

அரூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்காததை கண்டித்து நேற்று 4 கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அரூர்:
அரூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்காததை கண்டித்து நேற்று 4 கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
செல்போன் கோபுரம்
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வள்ளிமதுரையில்,செல்போன் ேகாபுரம் அமைத்து தரக்கோரி, வாழைத்தோட்டம், வள்ளிமதுரை, தோல்தூக்கி, தாதராவலசை ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். 
ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த கிராமங்களில் செல்போன் டவர் கிடைக்காமல் கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
தேர்தல் புறக்கணிப்பு
இந்த நிலையில், செல்போன் கோபுரம் அமைக்காததை கண்டித்து, 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  இதையடுத்து அரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்தையன், தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது செல்போன் கோபுரம் அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

Next Story