மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் ஓட்டுக்கள் பதிவு


மின்னணு வாக்குப்பதிவு
x
மின்னணு வாக்குப்பதிவு
தினத்தந்தி 7 April 2021 3:08 AM GMT (Updated: 2021-04-07T08:39:45+05:30)

மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் ஓட்டுக்கள் பதிவு.

கோவை,

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மொத்தம் 332 பேர் வாக்களித்தனர். இதையடுத்து மாலை 7 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கும்போது பதிவான வாக்குகளை சரிபார்த்தனர். அப்போது மொத்தம் 382 வாக்குகள் பதிவானதாக காண்பித்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சி முகவர்கள், அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்தனர். அப்போது காலை போடப்பட்ட 50 மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் தொடர்ந்து வாக்காளர்களை ஓட்டுப்போட அனுமதித்தது தெரியவந்தது. 

கூடுதலாக 50 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து வி.வி.பேட் எந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டின் அடிப்படையில் வாக்குகள் சரிபார்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story