கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வாக்குச்சாவடியில் சானிடைசர் வழங்க தி.மு.க.வினரை நிறுத்தியதால் பரபரப்பு + "||" + Tensions erupted as the DMK stopped delivering sanitizer at the polling booth for the Corona blockade measure
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வாக்குச்சாவடியில் சானிடைசர் வழங்க தி.மு.க.வினரை நிறுத்தியதால் பரபரப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வாக்குச்சாவடியில் சானிடைசர் வழங்க தி.மு.க.வினரை நிறுத்தியதால் பரபரப்பு.
ஸ்ரீபெரும்புதூர்,
தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர் வழங்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு ஊராட்சியில் அரசு பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்க தி.மு.க.வை சேர்ந்த 4 பெண்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த செங்காடு அ.தி.மு.க. நிர்வாகி பாபு தேர்தல் அதிகாரிடம் புகார் தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கு பதில் வேறு நபர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குப்பதிவு எந்திர பட்டனை அழுத்தினால் அனைத்து சின்னத்திலும் விளக்குகள் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் காங்கிரஸ் அணிக்கு எதிராக பா.ஜ.க.- கம்யூனிஸ்டு கட்சிகள் அமைத்துள்ள ரகசிய கூட்டணி அம்பலமாகியுள்ளது என கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி குற்றம்சாட்டினார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரஷிய அதிபர் புதின் டிரம்புக்கு ஆதரவாகவும் ஜோ பைடனை தோற்கடிக்கவும் முயற்சி செய்ததாக அமெரிக்க அரசின் உளவுத்துறை தற்போது தெரிவித்துள்ளது.