பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு


பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு
x
தினத்தந்தி 7 April 2021 6:16 AM GMT (Updated: 7 April 2021 6:16 AM GMT)

பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடைபட்டது.

பெரியபாளையம், 

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கல் கிராமத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலை செய்யவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அந்த எந்திரங்களை சரி செய்த பின்னர் ஒரு வாக்குச்சாவடியில் ½ மணி நேரம் தாமதமாகவும், ஒரு வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரம் தாமதமாகவும் வாக்குப்பதிவு தொடங்கியது.

திருவள்ளூரை அடுத்த சேலை கிராமம் மற்றும் ஒண்டிகுப்பம் கிராமங்களில் வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு எந்திரங்கள் திடீரென பழுதடைந்தது. இதன் காரணமாக ½ மணி நேரம் கால தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

பூண்டி

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது பேரிட்டிவாக்கம் ஊராட்சி. இங்குள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான தேர்தல் நடைபெற்றது.

நேற்று காலை 9 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. 

Next Story