மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று + "||" + in thoothukudi district, a further 43 people were infected with corona

தூத்துக்குடி மாவட்டத்தில்மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில்மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் மேலும் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 721 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 16 ஆயிரத்து 381 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 197 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதிப்பால் மொத்தம் 143 பேர் இறந்து உள்ளனர்.