மாவட்ட செய்திகள்

1759 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine for 1759 people

1759 பேருக்கு கொரோனா தடுப்பூசி

1759 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கிணத்துக்கடவு பகுதியில் 1,759 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக வட்டார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் 1,759 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக வட்டார மருத்துவ அதிகாரி தெரிவித்தார். 

கொரோனா பரவல் அதிகரிப்பு 

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதுபோன்று பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிணத்துக்கடவு பகுதியிலும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 

தடுப்பூசி 
இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. இங்குள்ள நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் பலர் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

இது குறித்து நல்லட்டிபாளையம் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா கூறியதாவது:-

கிணத்துக்கடவு தாலுகாவில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு கிராமங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. 

1,759 பேர் 

அதுபோன்று தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதுவரை 1,759 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். இங்கு தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போட வரும்போது கண்டிப்பாக ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும். 

கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொதுமக்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.  

ரூ.30 ஆயிரம் அபராதம் 

முக கவசம் அணியாமல் வெளியே செல்வது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது என்று இதுவரை பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. 

எனவே பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. பிரச்சினை திட்டமிடலில்தான் உள்ளது: கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை; மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை, பிரச்சினை திட்டமிடலில் தான் இருக்கிறது என்று மத்திய அரசு கூறுகிறது.
2. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
3. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 85 சதவிகிதம் குறைவு: மத்திய அரசு
தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 85 சதவிகிதம் குறைவு என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: 21 நாள்கள் இடைவெளியில் 2 டோஸ்களையும் செலுத்த வேண்டும்- சுகாதாரத்துறை
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
5. கொரோனா தடுப்பூசி முகாம்
வத்திராயிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.