பாம்பலம்மன் கோவில் திருவிழா


பாம்பலம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 7 April 2021 6:29 PM GMT (Updated: 7 April 2021 6:29 PM GMT)

பாம்பலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

தோகைமலை
தோகைமலை அருகே  டி.மேலப்பட்டியில் பிரசித்தி பெற்ற பாம்பலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டடு, டி.மேலப்பட்டி, தளிஞ்சி, ரெங்காச்சிபட்டி மற்றும் புரசம்பட்டி ஆகிய 4 ஊரை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் நாட்டாமைகள் முன்னிலையில் நேற்று முன்தினம் கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தாரை தப்படை முழங்க வீதிகளில் உலா வந்தது. நேற்று பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கிடா வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீருடன் பாம்பலம்மன் கரகம் எடுத்து விடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Next Story